நீலகிரி: குன்னூர் காட்டேரி சாலையில் உள்ள சேலாஷ் பகுதியில் கடும் மழை பெய்து வருவதால், ராட்சதப் பாறைகள் சரிந்து சாலையில் உருண்டு விழுந்துள்ளன. குன்னூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாறைகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாறைகள் சாலையில் உருண்டு விழுந்த நேரத்தில் அந்த வழியாக வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2qTTfXC
via IFTTT
No comments:
Post a Comment