குரு இடத்தில் பு.த.அருள்மொழி... வன்னியர் சங்கத்திற்கு புது தலைவர்

சென்னை: வன்னியர் சங்கத் தலைவராக பு.த.அருள்மொழியை நியமித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். வன்னியர் சங்கத்தின் முதன்மைச் செயலாளராக இருந்த பு.த.அருள்மொழி, இப்போது அந்த சங்கத்திற்கு தலைவராக உயர்ந்துள்ளார். இதற்கான அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டார். வன்னியர் சங்கத் தலைவராக இருந்த ஜெ.குரு உடல்நலகுறைவால் காலமானதால், சுமார் ஓராண்டுக்கு பிறகு அந்தப் பதவி நிரப்பப்பட்டுள்ளது.  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/33biRxF
via IFTTT

No comments:

Post a Comment